இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சென்செக்ஸ், நிப்டி சரிவு அடைந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுமே பெரிய அளவில் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்றும் சரிவில் தான் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சற்று முன் 125 புள்ளிகள் சரிந்து 59603 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 17,630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பங்குச்சந்தை சரிந்துள்ளதால் புதியதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.