பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் எதிர்பாராத வகையில் பங்குச்சந்தை இறங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் குறைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 336 புள்ளிகள் குறைந்து 64 ஆயிரத்து 982 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 119 புள்ளிகள் குறைந்து 19,310 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது.
தொடர்ச்சியாக பங்கு சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது