இந்திய பங்குச்சந்தை நேற்று காலையில் உயர்ந்து பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகமும் சரிவில் தொடங்கியது மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் உள்ளது. மும்பை பங்குச்சந்தை 220 புள்ளிகள் சரிந்து 85,420 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்து 25,120 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் லீவர், இன்டிகோ, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, எச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல், டி.சி.எஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.