கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையை நேற்று கூட 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் இறங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் தேர்தல் வரை பெரிய மாற்றம் பங்கு சந்தையில் இருக்காது என்றும் தேர்தலுக்குப் பின் பங்குச்சந்தை உச்சம் பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் எதுவும் நடைபெறவில்லை. இன்று நாடு முழுவதும் ராமநவமி கொண்டாடப்படுவதை அடுத்து இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த 17ஆம் தேதி ரம்ஜான் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதமே இரண்டாவது விடுமுறை நாளாக பங்கு சந்தைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த மாதமும் மே ஒன்றாம் தேதி மற்றும் மே 20 ஆம் தேதி மும்பையில் தேர்தல் காரணமாக பங்குச்சந்தை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது