நாசிக் நோட்டு அச்சகத்தில் 5 லட்ச ரூபாய் மாயமானதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற இடத்தில் நோட்டு அச்சகம் உள்ளது. இங்கு இந்திய கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஜூலை 12 வரையிலான காலகட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய் இந்த அச்சகத்தில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் என முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது
இது குறித்து அச்சக பாதுகாப்பு நிறுவன மேலாளர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாசிக் நகரத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் அங்கு வெளியில் இருந்து வந்து திருட ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றும் அதனால் அச்சகத்தில் உள்ள ஊழியர்கள் தான் திருடி இருப்பார்கள் என்றும் எனவே அச்சகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாசிக் நகரில் ஐந்து லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது