Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வாட்ச்மேன் திரைவிமர்சனம்!

வாட்ச்மேன் திரைவிமர்சனம்!
, வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (17:23 IST)
சமீபத்தில் நான் மக்களின் காவலன் என மோடி டுவிட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். இதனால் மோடி பெயருக்கு முன் சௌகிதார் வார்த்தை வந்தது அந்த சமயத்தில் வாட்மேன் என ஒரு நாயின் படத்தை வைத்து நானும் காவலாளி தான் என நாய் கழுத்தில் டேகை போட்டு  சௌகிதார் போஸ்டரை வாட்ச்மேன் படக்குழு வெளியிட்டு பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். இதனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் கிடைத்தது. இன்று இப்படம் (ஏப்ரல் 12ம் தேதி) வெளிவந்தது.
 

 
இயக்குனர்:- ஏ.எல் விஜய்
தயாரிப்பு:- அருண்மொழி மாணிக்கம் 
நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், சம்யுக்த ஹெக்டே, யோகி பாபு , மற்றும் பலர்
இசை:- ஜிவி பிரகாஷ்
 
கதைக்கரு:- 
 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிவி பிரகாஷ் பணக்கார வீட்டு பெண் சம்யுக்தாவை காதலிக்கிறார். காதல் தீவிரமடைய திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம், ஆனால் கையில் பணமில்லாததால் ஒரு பங்களாவில் நுழைந்து திருட முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பல பயங்கர சம்பவங்கள் அந்த பங்களாவில் நடக்கிறது. அதில் மாட்டிக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா, பங்களாவுக்குள் நடந்து என்ன? அவரின் காதல் திருமணம் கைகூடியதா என்பதே படத்தின் முழுக்கதை.
 
கதைக்களம் :- 
 
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் ஜிவி. தற்போது முழுநேர நடிகராக அடுத்தடுத்து பல படங்களில் கம்மிட்டாகி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்தவகையில் கடந்த வாரம் இவரது நடிப்பில் வெளிவந்த குப்பத்து ராஜா படத்தை தொடர்ந்து இன்று தானே இசையமைத்து நடித்திருக்கும் வாட்ச்மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
 
இப்படம் அடுத்தடுத்த ஸ்வாரஸ்யங்களுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோயின் சம்யுக்தாவுக்கான முக்கியத்துவம் குறைவு தான். ஆனால் ஹீரோ, ஹீரோயின் காட்சிகள் அங்கும் மிங்குமாக இருக்கிறதே தவிர ஜோடியாக அமையவில்லை. அதனை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இப்படத்தில் நடிகர் சுமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கும் ஹீரோவுக்குமான ஒரு காட்சி யாரும் எதிர்பாராத டிவிஸ்ட். அதனை நீங்கள் நிச்சயம் தியேட்டரில் பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும். அடுத்தது யோகி பாபு எப்போதும் போலவே தனது காமெடியாலும் எதார்தமான பேச்சாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார். படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய் திரில்லர் பாணியில் பல திடீர் திருப்பங்களுடனும்,  ஸ்வாரஸ்யங்களுடனும் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் எடிட்டர் ஆண்டனியும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்சிகளை அவ்வளவு சிறப்பாகவும்,  தெளிவாகவும் காட்டியுள்ளனர். 
 
படத்தின் ப்ளஸ் :-
 
வாட்ச்மேன் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை யூகிக்கமுடியாத அளவில் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது. யோகி பாபுவின் கவுண்டர், காமெடி, தியேட்டரை கிளாப்ஸ் பறக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள்ள இப்படத்தின் இசை மேலும் திகில்  ஃபீல் கொடுக்கிறது. 
 
படத்தின் மைனஸ்:- 
 
படத்தில் ஹீரோ - ஹீரோயினுக்கு இடையேயான காதல் காட்சிகளில் சற்று பின்தங்கிவிட்டது. இருந்தாலும் படத்தின் கதை  நம்மை கண்களை முழுமையாக  வாட்ச் பண்ண வைத்துவிடுகிறது.
சுவாரஸ்யங்கள் நிறைந்த இப்படத்தை நிச்சயம் எல்லோரும் பார்க்கலாம்.
 
இப்படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு:- 2.5\5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் சமந்தா சாப்பிடுவது இதைதான்...