ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதி அடங்கிய அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார்.
அதன்படி ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீக் குமார் தெரிவித்தள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும், நடைபெறும் என அவர் அறிவித்தார்.
ஹரியானாவிற்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்று அவர் தெரிவித்தார். மேலும் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.