மும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 22பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் ரயில் பகுதியான எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதாக ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இந்த வதந்தியால் பதற்றமடைந்த பயணிகள் தப்பிக்க வெளியேற முயற்சித்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை 22பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணியில் ஈடுப்படுள்ள போலீஸார் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
கனமழை பெய்ததால் நடைபாதை மேம்பாலத்தில் மழைக்காக ஒதுங்கிய மக்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து நடைபாதை மேம்பால கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயற்சி செய்தலில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
அதில் எதிர்பாராத விதமான 22பேர் முச்சுத்திணறி உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.