பாகிஸ்தானில் மிக வேகமாக நிமோனியா காய்ச்சல் பரவி வருவதாகவும் அங்கு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 240 குழந்தைகள் ஒரே மாதத்தில் உயிர் இழந்ததாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் நிமோனியா காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிமோனியாவால் அதிகம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறதாகவும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரே மாதத்தில் 244 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததாகவும் நாடு முழுவதும் 250 குழந்தைகள் உயிர் இழந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
பஞ்சாப், லாகூர் ஆகிய மாநிலங்களில் நிமோனியா காய்ச்சல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நிமோனியா பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் சுகாதாரத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.