மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா முன்னைலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில அறிவிப்புகள்:
-
பொதுவான வாக்காளர் பட்டியல் முறை, ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.
-
2025ம் ஆண்டு பழங்குடியினர் ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
-
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுப்படுத்தப்படும். திருநங்கைகளுக்கும் ஆய்ஷ்மான் திட்டம். இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்
-
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
-
ரேசன் கடைகளில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும்.
-
குறைந்த விலையில் பைப் லைன் மூலமாக கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
-
முத்ரா கடன் திட்ட உதவி 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும்.
-
நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
-
வந்தே பாரத்தில் ஸ்லீப்பர் படுக்கைகள், மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில்கள் இயக்கப்படும்.
-
சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
Edit by Prasanth.K