3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா
மும்பையில் உள்ள ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனையை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடினார்கள்
மும்பையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று ‘வோக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த மருத்துவமனையை இழுத்து மூடினர்
இந்த மருத்துவமனைக்கு உள்ளேயும், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியேயும் செல்ல அனுமதி இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியும் வரை இந்த மருத்துவமனை மூடப்பட்டிருக்கும் என்று மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் எப்படி பாதுகாப்பில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் என்பது வியப்பாக இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்