அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கடைபிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்கட்சிகள் காட்டும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நான்கு மாநில முதலமைச்சர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அசாம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்து கூறியபோது, தேர்தலுக்காக ஆகும் செலவை இந்த திட்டம் பெருமளவு மிச்சப்படுத்தும் என்றும் அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு செலவிட முடியும் என்றும் பிரதமரின் இந்த முடிவால் மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி குறித்த பிரதமர் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதில் ஒரு திட்டம்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்று உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்றுள்ள நிலையில் அசாம் மாநில முதல்வரும் இதை வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது