Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

லாலுபிரசாத்தின் 45 கோடி சொத்துகள் முடக்கம்

லாலுபிரசாத்தின் 45 கோடி சொத்துகள் முடக்கம்
, சனி, 9 டிசம்பர் 2017 (11:15 IST)
இரயில்வே ஊழலில் ஈடுபட்ட லாலுபிரசாத் குடும்பத்தின் பெயரில் உள்ள ரூ.45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத், ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தபோது, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் 2 ஓட்டல்களின் பராமரிப்பு உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததற்கு, பாட்னா நகரில் முக்கியமான இடத்தில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றார் என புகார் எழுந்த நிலையில் அவர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இது தொடர்பாக  லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை அமலாக்கத்துறை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில் பாட்னா நகரில் லாலுபிரசாத்தின் குடும்பத்தின் பெயரில் உள்ள ரூ.45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை முடக்கி வைப்பதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஆர்.பி-யை விட அதிக விலை - சரவணா செல்வரத்தினம் கடைக்கு நீதிமன்றம் அபராதம்