Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தி: ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

old man
, திங்கள், 6 மார்ச் 2023 (13:13 IST)
பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தி: ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!
பெற்ற பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்த 85 வயது முதிவர் ஒருவரால் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாத் சிங் என்ற 85 வயது முதியவர் கடைசி காலத்தில் தன்னை பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து அவர் பிள்ளைகளால் மனவிரக்தி அடைந்து தனக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உத்தர பிரதேச மாநில அரசுக்கு வழங்குவதாக உயிர் எழுத்து வைத்துள்ளார். 
 
அதுமட்டும் இன்று எனது இறப்புக்கு கூட பிள்ளைகள் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் எனது நிலத்தில் என் பெயரில் பள்ளியோ மருத்துவமனையோ அரசு கட்டிக் கொள்ளலாம் என்றும் தனது உயிலில் அவர் தெரிவித்துள்ளார். 
 
பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் ஏற்பட்ட விரக்தி காரணமாக 85 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை கோடி மதிப்பு சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்த தகவல் நம் மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது வழக்கமானது அல்ல, ஆனால் வழக்கு எப்படி வழக்கமாகிறதா என பார்க்கலாம்: தமிழிசை