Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டெல்லியில் கூடியது NDA எம்பிக்கள் கூட்டம்.! சந்திரபாபு, நிதீஷ் பங்கேற்பு..! மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

Modi

Senthil Velan

, வெள்ளி, 7 ஜூன் 2024 (12:05 IST)
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில்   தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.
 
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். குறிப்பாக, தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவராக இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
webdunia
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்  விழாவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.தொடர்ந்து 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவரோடு முக்கிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.
 
பாஜக மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் தோற்றபோதிலும் ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அமைச்சரவையில் 40 புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 
பிரதான கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் 5 அமைச்சர் பதவிகள் மற்றும் மக்களவை தலைவர் பதவியை கோருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 3, சிராக் பாஸ்வான் தரப்பு 2, ஜிதன்ராம் மாஞ்சி தரப்பு 2, சிவசேனா ஷிண்டேஅணி 2 அமைச்சர் பதவிகளை கோரி வருகின்றன. நிதித் துறை அல்லது அதில் இணை அமைச்சர் பதவியை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 கட்சிகளும் கேட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் தோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? ஆச்சரிய தகவல்..!