மத்தியப்பிரதேசத்தில் குழந்தை கடத்தல் வதந்தியால் அப்பாவி பெண் ஒருவரை பொதுமக்கள் படுகொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கடத்தல் சம்மந்தமாக பரப்பப்படும் வதந்திகளால் அப்பாவி பொதுமக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அரசும் எவ்வளவு தான் விழிப்புணர்வு நடத்தினாலும் இதனை புரிந்து கொள்ளாத மக்கள் அப்பாவிகளை அடித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் மூலம் குழந்தை கடத்தல் வதந்தி பரவியுள்ளது. இதனால் அச்சத்துடன் இருந்த பொதுமக்கள் இளம்பெண் ஒருவரை குழந்தை கடத்துபவர் என நினைத்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீஸார் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.