குஜராத்தில் சட்டசபைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்று வெளியிட்டது.
சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் எனவும் இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளில் இருக்கும் நிலையில் அந்த சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி முடிவடைகிறது என்பதால், தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.
இந்த நிலையில், குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெறும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,டெல்லி மற்றும் பஞ்சாபில் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், குஜராத்திலும் வெற்றி பெற முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து அவர் குஜராத் மக்களுக்கு விடுத்துள்ள ஒரு அறிக்கையில், நான் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரரன்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் இந்த மா நிலத்திற்குத் தேவையான, பள்ளிகள், மருத்துவமனை, மின்சாரம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.