லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் மகள் தனது தாய் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்து உடனே சொந்த ஊருக்கு வந்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் என்பவர் மெயின்புரி என்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் இந்த தொகுதியில் தற்போது தீவிரமாக பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மகள் அதிதி லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மா தேர்தலில் போட்டியிடுவதை அறிந்து உடனே லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது
அதிகாலையில் அவர் பிரச்சாரத்துக்கு கிளம்பி விடுவார் என்றும் ஒவ்வொரு வீடாக சென்றும், சிறுசிறு கூட்டங்களில் பேசுவதோடு கட்சி நிர்வாகிகளின் துணையோடு தனது தாயாருக்கு வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது
தமிழகத்தில் கூட செளம்யா அன்புமணிக்காக அவரது இரண்டு மகள்கள் பிரச்சாரம் செய்தது போல் அகிலேஷ் மகளும் அவரது அம்மாவுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.