ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக இந்திய ஒற்றுமை என்ற பயணத்தை நடத்தி வரும் நிலையில் இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதேச முதல்வர் சமாஜ்வாதி கட்சித் தலைவராக இந்த யாத்திரையில் பங்கேற்பார் என்று தகவல் வெளியான நிலையில் தனக்கு இந்த யாத்திரையில் பங்கேற்க அழைப்பு வரவில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
தொலைபேசி மூலமாக அழைப்பு வந்தால் கூட அதை நான் ஏற்றுக் கொண்டிருப்பேன் என்றும், ஆனால் எந்தவித அழைப்பும் வரவில்லை என்றும் எங்களைப் பொருத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்