அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கத்தில் அவருடைய டிபி புகைப்படம் இருக்கும் இடத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகைப்படம் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டுவிட்டரில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் பாலிவுட்டின் சீனியர் நடிகர் அமிதாப்பச்சன். அவருடைய டுவிட்டர் பக்கத்தை 37 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக திடீரென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகைப்படம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே இம்ரான்கான் புகைப்படம் தோன்றியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அமிதாப் டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது
அமிதாப் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறிய நடிகை கஸ்தூரி, 'அமிதாப், இம்ரான்கான் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க போகிறாரா? என்று கிண்டலுடன் பதிவு செய்துள்ளார்