ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதலே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா குறையாத நிலையில் மே 5 முதல் மதியம் 12 மணி முதலே ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நடவடிக்கை 2 வாரத்திற்கு தொடரும் என்றும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.