ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினத்தை மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முழுமூச்சில் செயல்ப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தனது அடுத்த அதிரடியாக ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டும் வருகிறார். அதன்படி விசாகப்பட்டினம் முதன்மை தலைநகராகவும், அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், கர்நூல் நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கலாம் என தெரிகிறது.
ஆனால், இதற்கு முன்னர் ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதற்கு ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் விசாகப்பட்டினத்தில் நடைபெறும். அங்குள்ள ராமகிருஷ்ணா கடற்கரை சாலையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றுவார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்டியால் கலங்கிபோய் உள்ளார் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. அமராவதி சந்திரபாபு நாயுடுவின் கனவாக இருந்தது. ஆனால், அதை ஒன்னுமில்லாமல் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி சிதைத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.