அசாமில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்வதால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ரயிலே கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுவரை சுமார் 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பல இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் மழை வெள்ளத்தால் மூழ்கிய ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் அசாம் மக்களுக்காக தாங்கள் வேண்டிக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.