பாஜக ஆட்சியில் பழங்குடியின மக்கள் மீது வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இங்குள்ள பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த கொடூரம் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தின இந்தக் கொடூர சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதி என்பதால் அவர்கள் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக ஆட்சியில் பழங்குடியின மக்கள் மீது வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் ஒருவரின் குற்றச் செயலால் மொத்த மனிதகுலமே அவமானம் அடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான வெறுப்பின் பாஜவின் உண்மை முகமும் குணமும் இதுதான் என்று தெரிவித்துள்ளார்.