அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு இந்து - முஸ்லீம் அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அயோத்தி நில வழக்கில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள நகர் பகுதியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நேற்று இந்து - முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், முஸ்லீம் மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும்போது அனைவரும் அமைதியை நிலைநாட்டுவோம், எந்தவித இடையூறுகளும் தரமாட்டோம் என அனைத்து அமைப்புகளும் உறுதியளித்தன.