ராஜஸ்தானில் அதிமான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வந்த கஸ்டமரை வங்கி மேனேஜரே கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் நிகில் குப்தா. பெட்ரோல் பங்க் மூலமாக கிடைக்கும் பணத்தை வாரம்தோறும் திங்கட்கிழமையில் வங்கியில் தனது கணக்கில் செலுத்தி வந்துள்ளார் நிகில் குப்தா. வாரம்தோறும் நிகில் குப்தா லட்சக்கணக்கில் பணம் செலுத்துவதை கவனித்த அந்த வங்கியின் மேனேஜர் வினித் சிங் கவுர் அந்த பணத்தை அபகரிக்க திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக இரண்டு ரவுடிகளின் உதவியை நாடிய அவர், அவர்களை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி துப்பாக்கியும் வாங்கி வர சொல்லியுள்ளார். பின்னர் வழக்கம்போல நிகில் குப்தா திங்கட்கிழமை பணம் செலுத்த வங்கிக்கு சென்றபோது ஆளில்லா பகுதியில் மறித்த இரண்டு ரௌடிகளும் நிகில் குப்தாவிடம் இருந்து பணத்தை பறித்ததோடு சுட்டும் கொன்றுள்ளனர். பின்னர் தொலைவாய் காரில் காத்திருந்த வங்கி மேனேஜரோடு தப்பி சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசரானை நடத்தியபோது சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்த உண்மை தெரிய வந்த நிலையில் வங்கி மேனேஜர், அவருக்கு உதவிய ரவுடிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஸ்டமரிடம் இருந்து வங்கி மேலாளரே பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.