Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தடை செய்யப்பட்ட Battleground mobile (Pub G) கேம்க்கு மீண்டும் அனுமதி?

PUB G
, வெள்ளி, 19 மே 2023 (14:47 IST)
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன வீடியோ கேம் Battleground mobile மீண்டும் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே வீடியோ கேம் விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் சில ஆண்டுகள் முன்பு வரை அதிகமான இளைஞர்களால் விளையாடப்பட்ட ஆன்லைன் கேம்தான் பப்ஜி என பிரபலமாக அறியப்படும் Battleground mobile. சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த கேம் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், அதன் சர்வர்களில் பிரச்சினை உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதனால் இந்த கேமை இந்திய அரசு தடை செய்தது. அதன்பின்னர் குறைகளை சரி செய்து Battleground mobile India என்ற பெயரில் மீண்டும் வெளியாகிறது. இதற்காக இந்திய அரசின் அனுமதியை அந்நிறுவனம் கோரியிருந்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்கள் சோதனை அடிப்படையில் இந்த கேமை இந்தியாவில் அனுமதிக்க அரசு அனுமதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.10 ஆயிரம் ரூபாயா? – அசர வைக்கும் Realme Narzo N53!