மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது, பாஜகவினர் சிலர் சாலை ஓரம் நின்றிருந்த போலீஸார் வாகனத்திற்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், உபி.,யில் ஒரு போலீஸ்காரரை பாஜக கவுன்சிலர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்த மாநிலத்தில், உள்ள மீரட் பகுதியில் உள்ள ஒரு கவுன்சிலர், நேற்று காவல நிலையத்திற்குள் புகுந்து, அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டரிடம் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, காவல் நிலையத்தில் ஒரு பெண் கால்வர்கள் சிலர் இருந்த போதிலும், கவுன்சிலருக்கும், போலீஸ்காரருக்கும் , பேச்சின் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் கவுன்சிலரை தள்ளிவிட, அவரோ போலீஸ்காரரை பலமாகத் தாக்கினார். இதில் போலீஸ்காரர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.