மஹாராஷ்டிராவில் நடந்த சில தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பது தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தகவல் அறியும் உரிமை சட்டம் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்துதான் பாஜக வெற்றிபெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியது. குஜராத் தேர்தலிலும், திரிபுரா தேர்தலிலும் பாஜக அப்படித்தான் வெற்றிபெற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் ஒன்றில் பாஜக முறைகேடு செய்தது அம்பலம் ஆகியுள்ளது. இந்த முறைகேட்டை தேர்தல் ஆணையம் மூடி மறைத்த சம்பவமும் தற்போது வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவில் சிலா பரிசத் என்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர் ஆஷா அருண் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜக கட்சி வேட்பாளரின் தாமரை சின்னத்திற்கு ஓட்டு விழுந்து இருக்கிறது.
இதனால் வாக்களிக்கும் எந்திரத்தில் கோளாறு என்று காரணம் கூறி தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம். ஆனால், அணில் கல்காளி எதற்காக தேர்தல் நிறுத்தப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது, இதனால்தான் தேர்தலை நிறுத்தினோம் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு முறை நடந்த முறைகேடு வெளியாகியுள்ளது, ஆனால் இது போன்று வெளியாகமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கும் என அடுத்த கேல்வி எழுப்பட்டுள்ளது. இதனால், பாஜக மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது.