ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதியில் எம்எல்ஏ ஒருவர் திருமாண ஜோடிகள் இடையே உதட்டோடு உதடு முத்தமிடும் போட்டியை நடத்தி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் லித்திபாரா தொகுதியின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் எம்எல்ஏ சிமோன் மராந்தி தால்பாஹாரி திருமணமான ஜோடிகள் இடையே முத்தமிடும் போட்டியை நடத்தி உள்ளார்.
இச்சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து எம்எல்ஏ சிமோன் கூறியதாவது, முத்தமிடும் போட்டியானது காதல் மற்றும் நவீனத்தை பரப்பவே ஏற்பாடு செய்யப்பட்டது. பொது இடத்தில் வெளிப்படையாக முத்தமிடுவதால் பழங்குடியின தம்பதியினரின் தயக்கம் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.
பாஜக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சிமோன் மராந்தி கேலிக்கூத்தாக்கி உள்ளார் என பாஜக விமர்சனம் செய்து உள்ளது.