ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு மாயாவதி - அகிலேஷ் யாதவ் இடையே உள்ள ஒப்பந்தத்தை பாதிப்படைய செய்யும் நகர்வுகளை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்து வருகிறார்.
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து அதற்கு பழிவாங்கும் விதத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நகர்வுகளை செய்து வருகிறார்.
ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெறவில்லை. இதனால் சமாஜ்வாதி கட்சி ஒரு வேட்பாளரை இழக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக முலாயம் சிங்கின் இளைய சகோதரர் சிவ்பால் யாதவ் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்.பி.க்களில் 9 பேர் பாஜக சார்பிலும் ஒருநபர் சமாஜ்வாதி கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். பாஜக மாயவதி கட்சி வேட்பாளரை தோற்கடிக்க அவர்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர்.