பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.130 கோடி வீணாகி விட்டது என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது, காங்கிரஸ் கட்சி எப்போதும் பாராளுமன்றத்தை மதிப்பது இல்லை. ஒரு குடும்பத்துக்கு சேவை செய்தால் மட்டுமே பாராளுமன்றத்தை இயங்க விடும். பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.130 கோடி வீணாகி விட்டது. பெகாசஸ் விவகாரமோ, விவசாயிகள் போராட்டமோ அர்த்தமுள்ள விவாதத்துக்கு பாஜக தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.