லாலு மற்றும் நிதிஷ் குமாரின் மெகா கூட்டணியை உடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்களாம் பாஜகவினர்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகப் பதவியேற்றனர்.
இதற்கிடையே, லாலுவிற்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியது. இந்த மோதல்கள், சிபிஐ ரெய்டு மூலம் வெடித்தது. இந்த வழக்கில் துணை முதல்வர் தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றது. தேஜஸ்வியை ராஜினாமா செய்யுமாரு நிதிஷ் கோரினார்.
ஆனால், தேஜஸ்வி இதை கண்டுகொள்ளாததால் நிதிஷ் குமார் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இதனால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்ள பாஜக நிதிஷ் குமாருக்கு ஆதரவு கரம் நீட்டியது. மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராக பாஜக வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.
தனது சூழ்ச்சிகளால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குளறுபடி செய்து மறை முகமாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.