சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய ரூ.10 கோடி 17 லட்சம் செலவழித்துள்ளது பாஜக.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது போலி செய்திகளை பரப்பி வருவதாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டினார்.
இந்த கூற்றிற்கு ஏற்ப பாஜக 2019 - 2020 ஆம் ஆண்டில் ரூ.4 கோடி 61 லட்சத்தை பேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது அம்பலமாகியுள்ளது. பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் ரூ.1 கோடியே 84 லட்சமும், ஆம் ஆத்மி கட்சி ரூ.69 லட்சமும் செலவு செய்துள்ளது.
இதனோடு அதிகம் செலவு செய்ததில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை. அந்த நிறுவன பணத்தையும் கணக்கில் சேர்த்தால் பாஜகவின் மொத்த செலவு ரூ.10 கோடி 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.