Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

யானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி

யானைகளை விரட்ட  உதவும்  தேனீ ரீங்கார  ஒலிபரப்புக்  கருவி
, திங்கள், 14 அக்டோபர் 2019 (21:35 IST)
சமீபகாலமாக மனிதர்களை யானைகள் தாக்குவதும், யானைகளை மனிதர்கள் பல விதமான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்து வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவியை வடிவமைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அபிநவ் நாகராஜன்.
 

கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த பத்திரப் பதிவுத் துறை சார் பதிவாளர் ஆனந்தகுமார், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை முத்து லட்சுமி ஆகியோரின் மகனான இவர், இங்குள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயாவில் பயில்கிறார். வழிகாட்டி ஆசிரியர் ஜெ.ராஜசேகரனின் உதவி யுடன் இந்தக் கருவியை இவர் வடிவமைத் துள்ளார். யானைகளைக் கட்டுப்படுத்தப் பயன் படுத்தப்படும் மின்வேலி முறையால் யானைகள் மட்டுமின்றி, மனிதர்களும் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதுதவிர, யானைகளை விரட்டுவதற்காக தீ மூட்டுவது, பட்டாசுகள் வெடிப்பது போன்றவையும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், தேனீக்களின் ரீங்கார ஒலியை ஒலிபரப்பும் கருவியை வடிவமைத்துள்ளார் அபிநவநாகராஜன். யானை கள் தேனீக்களின் ரீங்காரத்துக்கு அஞ்சுபவை. தேனீக்களின் ரீங்கார ஒலியை 8 மீட்டர் தொலைவுக்கு முன்னரே உணரக்கூடியவை. தேனீயின் ரீங்கார ஒலியின் அதிர்வெண் 150 ஹெர்ட்ஸ் முதல் 200 ஹெர்ட்ஸ் வரையிலானது என்பதால் தேனீக்களின் ரீங்கார ஒலியை உணரும் யானைகள் உடனடியாக, தான் இருக்கும் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு நகரத் தொடங்கிவிடும். எனவே, நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி தேனீக்களின் ரீங்கார ஒலியை செயற்கை முறையில் சிறிய ஒலிபெருக்கி, தானியங்கி நவீன சென்சார்கள் உதவியுடன் இயங்கும் விதமாக குறைந்த செலவில் இக்கருவி வடி வமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாணவர் அபிநவநாகராஜன் கூறியதாவது: இக்கருவியை கொண்டு குடி யிருப்பு பகுதிகளில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இக்கருவியை வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் பொருத்துவதன் மூலம் யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை 100 சதவீதம் தடுக்க முடியும். மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களுடன் இக்கருவியை இணைத்து பல மீட்டர் தொலைவில் வரும் யானைகளைக் கூட கண்டறிந்து மனித-யானை மோதல்களை தடுக்கலாம்.

மேலும், இந்தக் கருவியை சிறிய வடிவில் கைக்கடிகாரம் போன்று வடிவமைத்து கையில் அணிந்துகொண்டு செல்லும்போது மலைப்பகுதிகளில் யானைகளால் ஏற்படக்கூடிய மனிதர்கள் மீதான தாக்குதல்களில் இருந் தும் தப்பிக்க முடியும். தோட்டம் மற்றும் வயல்வெளியிலும் இக்கருவியை அமைத்து யானைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பயிர்கள் மற்றும் விவசாயிகளை காப்பாற்றலாம். மேலும், மலைப்பகுதிகளில் பயணிக்கக்கூடிய வாகனங்களின் வெளிப் பகுதியில் இக்கருவியை பொருத்துவதன் மூலம் யானைகளால் வாகனங்கள் தாக்கப்படுவதை முழுமையாக தவிர்க்கலாம். இக்கருவி பொருத்தப்பட்டுள்ள பகுதி யில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை ஒலி அதிர்வுகள் இருக்கும். அந்த குறிப் பிட்டதொலைவுக்குள் யானை வந்துவிட்டால் உடனே, இக்கருவியில் இருந்து தேனீயின் ரீங்காரம் ஒலிக்கத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து