2019-2020 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல் தற்பொழுது தாக்கல் செய்து வருகிறார்.
வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியூஷ் கோயல் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். ஊழல் இல்லாத அரசாக செயல்படுகிறோம் என்று பேசினார்.