குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்க சட்டம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் உட்பட பல அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் தொடரின் கூட்டுக்கூட்டம் இன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று அக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ”போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை சம்பவங்களினால் சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது” என கூறினார். மேலும் அவர், “குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம். இதனை வரவேற்கிறேன்’ எனவும் கூறியுள்ளார்.