பழைய கார்களை அழிப்பதற்கு கொடுத்தால் புதிய கார்களை வாங்கும்போது பதிவு கட்டணம் கட்ட தேவையில்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.
ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை கார்கள் பலருக்கு மிகப்பெரும் அதிசயமாகவே இருந்து வருகின்றன. கார் வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம், அதிலும் புதிய ரக கார் என்றால் சொல்லவே தேவையில்லை. சிலர் புதிய ரக கார்கள் வாங்க திட்டமிட்டால் பழைய கார்களை வேறு யாருக்காவது விற்று விடுகிறார்கள். ஒரு வாகனம் 15 ஆண்டுகளுக்கும் மேல் உபயோகிக்கப்படும்போது அது சுற்றுசூழலை பாதிக்கும் என அரசு அறிவித்துள்ளது.
புதிய கார்கள் வாங்க முடியாதவர்கள் பழைய விலைகளில் உபயோகிக்கப்பட்ட கார்களை வாங்கி கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் ஒரு கார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே உபயோகிக்கப்படும் நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் பழைய காரை இரண்டாம் கைக்கு விற்காமல் அதை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் புதிய கார் வாங்கும்போது பதிவு கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என ஒரு சலுகையை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.