மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில் இடைப்பட்ட காலத்தில் நிதி தேவைகளை சமாளிக்க மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அவ்வபோது நடந்து வருகிறது. முன்னதாக நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பொதுத்துறை வங்கிகளாண எஸ்பிஐ பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யுகோ பேங்க் ஆகிய 6 வங்கிகளில் மத்திய அரசின் வசம் உள்ள 80 சதவீதம் பங்குகளில் இருந்து 5 முதல் 10 சதவீதத்தை விற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதால கூறப்படுகிறது.