கொரோனா கிருமித்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட மொத்தம் 14 மாநிலங்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் தற்போது நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு மொத்தம் 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.1276.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், ஆந்திராவிற்கு மத்திய அரசு ரூ.491.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், திரிபுராவிற்கு மத்திய அரசு ரூ.423 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 417.75 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு 638.25 கோடியும், நாகலாந்து மாநிலத்திற்கு 326.41 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118.50 கோடியும், மேகாலாயாவுக்கு 40.91 கோடியும் மணிப்பூருக்கு 235.33 கோடிய்ம் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது