சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் இயற்றப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் முறைகேடான பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பதும் இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் எழுகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கூகுல், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை சரிபாக்க பிஐபி என்னும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை ஐடி அமைச்சகம் அமைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் செய்யப்படும் பதிவு தவறானது என பிஐபி சுட்டி காட்டினால் அந்த தகவலை நிறுவனங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என விதிமுறை வாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் மோசமான பதிவுகளை கட்டுப்படுத்த இந்த வழிமுறை உதவும் என்று தெரிகிறது