டெல்லியில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துவிடலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 8 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இப்போது இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.