உலகம் முழுவதிலும் கொரோனாவின் கோரபிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது. முன்பு 12 நாட்கள் எடுத்துக் கொண்டு இரட்டிப்பான கொரோனா தற்போது 10 நாட்களிலேயே இந்த நிலையினை அடைகிறது. பல இடங்களில் கொரோனா பயங்கர வீரியமாக பரவுவதே இதற்கு காரணம்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “நம் முன்னே பெரிய சவால் இருக்கிறது. கொரோனா வைரஸை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை பற்றி பேசுகிறோம். வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து பேசுகிறோம், ஆனால் அனைத்தியும் தாண்டி நம் முன் உள்ள மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்க்கொள்ள வேண்டும் என்பதுதான்! வைரஸிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள சமூகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வேண்டும். அதற்கு அரசுக்கு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.