ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான சோமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தனது மனைவியுடன் சென்று வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்த வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சோமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ, தீபிந்திர் கோயல் என்பவர், தனது மனைவியுடன் குருகிராமில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவை டெலிவரி செய்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
"சில நாட்களுக்கு முன் நானும் என் மனைவியும் சேர்ந்து உணவு டெலிவரியில் ஈடுபட்டோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருவரும் உணவுகளை எடுத்து பையில் போட்டு, பைக்கில் பயணம் செய்வது, வாடிக்கையாளர்களின் முகவரியை மொபைல் மூலம் உறுதி செய்வது, வாடிக்கையாளரிடம் உணவை ஒப்படைத்துவிட்டு, அவரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ நேரடியாக உணவு டெலிவரி செய்வது போற்றத்தக்கது என்றாலும், இது ஒரு விளம்பர உத்தி என்று சோமாட்டோ ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.