Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி: கின்னஸ் சாதனை செய்த போலீஸ்காரர்கள்

10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி: கின்னஸ் சாதனை செய்த போலீஸ்காரர்கள்
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (17:12 IST)
கேமிரா செல்போன் அறிமுகமானதில் இருந்தே இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆபத்தான செல்பி எடுப்பதால் உயிரை இழக்கும் சோகங்களும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் 10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி எடுத்து சாதனை செய்துள்ளார். இந்த சாதனை கின்னஸ் ஏற்றுக்கொண்டு சட்டீஸ்கர் காவல்துறைக்கு சான்றிதழ் அளித்துள்ளது. சமீபத்தில் நடந்த 'ராக்கி வித் காக்கி' என்ற நிகழ்ச்சியில் சட்டீஸ்கர் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு 50,033 பெண்கள் ராக்கி கட்டி செல்பியும் எடுத்து கொண்டனர். தற்செயலாக நடந்த இந்த நிகழ்ச்சியால் தற்போது கின்னஸ் என்ற பெருமை கிடைத்துள்ளது.

webdunia
இதுகுறித்து சட்டீஸ்கர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “10 மணி நேரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிக செல்ஃபிகள் எடுக்கப்பட்டதற்காக கின்ன்ஸ் சாதனை அங்கீகாரம் எங்கள் மாநில காவல்துறைக்கு கிடைத்துள்ளது. ’ராக்கி வித் காக்கி’ என்ற நிகழ்ச்சி மூலம் பெண்கள் காவல்துறையினரை எளிதில் அணுகி தங்களது பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இந்த நிகழ்ச்சியால் மக்களுக்கு விழிப்புணர்வும் எங்களுக்கு கின்னஸ் சாதனையும் கிடைத்தது' என்று கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: மெகா கூட்டணிக்கு புதிய திட்டமா?