பிராமணரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மாநில முதல் அமைச்சர் ஒருவரின் தந்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பிராமணர்கள் மீதான துவேஷ கருத்துக்களைப் பல அரசியல்வாதிகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் என்பவரின் தந்தை நந்தகுமார் பாகல், என்பவர் பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பேசியுள்ளார்
பொது மேடை ஒன்றில் அவர் பேசிய இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பிராமணர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட நிலையில் சற்று முன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நந்தகுமார் பாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன