கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க தயார் என சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் சீனா உதவ தயார் என்றும் அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் சீனாவின் இந்த உதவியை மத்திய அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்