இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக மூன்று கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை என்பதும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரி மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது
பள்ளி கல்லூரிகள் திறந்தவுடன் முதல் கட்டமாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்துக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால் அதற்குள் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது