கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் குறைவு.. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 1 ஜூலை 2025 (07:58 IST)
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் மாற்றம் ஏற்படும் நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ சிலிண்டரும் விநியோகம் செய்து வரும் நிலையில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று புதிய விலையை நிர்ணயம் செய்து வருகிறது. 
 
அந்த வகையில், இன்று ஜூலை முதல் தேதி என்ற நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 57.50 ரூபாய் குறைந்து, 1823.50 ஆக விற்கப்பட்டு வருகிறது. 
 
வீடுகளில் பயன்பாட்டிற்காக விநியோகம் செய்யப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி, ரூபாய் 868.50 ஆகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments