காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ-களை இரவோடு இரவாக பெங்களூருக்கு அழைத்து, அங்கு அவர் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். இதனால், காங்கிரசின் பலம் குறைந்துள்ளது.
குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பாக அமித்ஷா மற்றும் ஸ்மிருதி ராணி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார்.
காங்கிரஸ் வெற்றி பெற 44 எம்எல்ஏ-களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே சில எம்எல்ஏ-கள் பாஜக பக்கம் சாய்ந்ததால், மீதி இருக்கும் எம்எல்ஏ-களை இரவோடு இரவாக சிறைபிடித்து வைத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சசிகலா தனது பலத்தை காட்ட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை பிடித்ததை நினைவு படுத்துகிறது.